வாத்தி ஷூட்டிங் போது தனுஷ் செய்த செயல் மொத்தமா 12.! இளம் நடிகை கூறிய சீக்ரெட் இதோ

0
வாத்தி  ஷூட்டிங் போது தனுஷ் செய்த செயல் மொத்தமா 12.! இளம் நடிகை கூறிய சீக்ரெட்  இதோ

தனது நடிப்புத்திறன் மூலம் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் என சென்று விட்டார் நடிகர் தனுஷ். தற்போது அவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் எனும் திரைப்படத்திலும், தெலுங்கு – தமிழ் திரைப்படமாக உருவாகும் வாத்தி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் வாத்தி திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் சித்தாரா பட நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் மலையாள நாயகி சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது, தனுஷ் பற்றிய ஒரு சுவாரஸ்ய விஷயத்தை கூறினார். தனுஷ் சிறந்த நடிகர். அது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒரே ஷாட்டில் இயக்குனருக்கு என்ன தேவையோ? அதனை கட்சிதமாக நடித்து கொடுத்து முடித்து விடுவார். இதுவும் நமக்கு தெரியும்.

தனுஷ் ஷூட்டிங் இடைவேளையில், அதிகமாக புத்தகம் படிப்பாராம். அப்படி வாத்தி சூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமே சுமார் 12 புத்தகங்களை தனுஷ் வாசித்து முடித்து இருப்பாராம். இதனை சம்யுக்தா மேனன் சீக்ரெட் செய்தியாக குறிப்பிட்டு இருந்தார். அந்த அளவுக்கு புத்தகங்கள் மீது ஆர்வமாக இருப்பாராம் தனுஷ்.

தனுஷ் புத்தகம் படிப்பதை பார்த்து தனக்கும் அந்த ஆசை வந்து, தற்போது மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்து உள்ளாராம் சம்யுக்தா மேனன். பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்துள்ள கடுவா எனும் திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்து உள்ளார். இந்த திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது.

No posts to display