உண்மையிலேயே விஜய்-லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் LCU உள்ளதா வெளியான மாஸ் அப்டேட் இதோ !!

0
உண்மையிலேயே விஜய்-லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் LCU உள்ளதா வெளியான மாஸ் அப்டேட் இதோ !!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 67’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில், இந்த படத்திலும் LCU இருக்கும் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் இந்த படத்தில் ‘கைதி’ படத்தின் சில காட்சிகள் இடம் பெற்றதை அடுத்து இனி அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் படங்களில் LCU இடம்பெறும் என்று கூறப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறியபோது, LCU என்பது மக்கள் கொடுத்த பெயர் என்றும் இனி வரும் காலங்களில் எனது அடுத்தடுத்த படங்களில் முந்தைய படங்களின் கதா பாத்திரங்களை பயன்படுத்தும் LCU முறை இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’ படத்திலும் லோகேஷ் கனகராஜின் LCU இருக்குமா என்ற கேள்வி எழுப்பிய போது, அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை ஆனால் அதே நேரத்தில் ஒப்புக்கொள்ளவும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ‘தளபதி 67’ படத்தில் இயக்குனர் லோகேஷின் முன்னைய படங்களின் கேரக்டர் இணைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No posts to display