Friday, December 2, 2022
Homeசினிமாஇனியாவது உங்கள் தங்கையாக வனிதாவை ஏற்றுக்கொள்வீர்களா? அருண் விஜய்யின் நச் பதில் என்ன...

இனியாவது உங்கள் தங்கையாக வனிதாவை ஏற்றுக்கொள்வீர்களா? அருண் விஜய்யின் நச் பதில் என்ன தெரியுமா ?

Date:

Related stories

நித்தம் ஒரு வானம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

நவம்பர் 4 ஆம் தேதி வெளியான நித்தம் ஒரு வானம், டிசம்பர்...

யாஷ் தனது அடுத்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்

சூப்பர் ஹிட் 'கேஜிஎஃப்' தொடர் தயாரிப்பாளரான யாஷின் அடுத்த திட்டம் என்ன...

அமெரிக்காவின் டெலிகாம் தடையை தொடர்ந்து சீனா தனது நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்

புதிய சீன தொலைத்தொடர்பு உபகரண விற்பனை மீதான அமெரிக்க மத்திய தகவல்...
spot_imgspot_img

நடிகர் அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர் வனிதாவை ஏற்றுக்கொள்வீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு நச்சென்று அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாரின் முதல் தாரத்தின் மகன்தான் அருண் விஜய்க்கு சமீபத்தில் படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், அஜித் நடிப்பில் வேதாளம் படத்தில் நடித்து மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனால் மஞ்சுளாவுக்கு விஜயகுமாருக்கும் பிறந்த வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.

இவர்களில் வனிதா விஜயகுமாருடன் குடும்ப தகராறு இருந்து வருவதால் விஜயகுமார் உள்பட மற்ற உறுப்பினர்கள் யாரும் இவரிடம் பேசுவதில்லை. இந்த ஏக்கம் வனிதாவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் விஜயகுமாரும் அவரது மகன், மகள்கள் ஆகியோர் ஒரே உடை அணிந்து எடுக்கும் செல்பி படங்களை அவர்களது இன்ஸ்டாவிலிருந்து எடுத்து வனிதா ஷேர் செய்து பாசத்திற்கு ஏங்கி வருகின்றார்.

இந்த நிலையில் அருண் விஜய் தனது சகோதரியின் கணவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஒரு குடும்ப பாசத்தை சொல்லும் கதையாகும். 3 அண்ணன்கள், அவரது தம்பியாக அருண் விஜய் என பாச பிணைப்புடன் எடுக்கப்பட்டது.

ஆனால் அருண் விஜய் அவருடைய தகப்பனாரின் இரண்டாம் தாரத்திற்கு பிறந்தவர். இதனால் மற்ற மூவரான சமுத்திர கனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் ஆகியோர் அருண் விஜய் மீது பாசத்தை காட்டமாட்டார்கள்.

ஒரு பிரச்சினையில் அருண் விஜய்யை மற்ற 3 அண்ணன்களும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள். குடும்பத்தை ஒன்று சேர்க்க அருண் விஜய் பாடுபடுவதே இப்படத்தின் கதையாகும்.

கிட்டத்தட்ட நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சினையை அப்படியே பிரதிபலிக்கின்றது.

இதையடுத்து அருண் விஜய்யிடம் “குடும்பத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது, ஒற்றுமையா இருக்க வேண்டும் என படத்தில் சொல்லியுள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே ஒருவர் தனியாக இருக்கிறார் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரை சேர்த்துக் கொள்ள போறீர்களா” என கேள்வி எழுப்பினார். அப்போது அருண் விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார்.

உடனே பின்னால் இருந்த ஒருவர் அந்த செய்தியாளரிடம் இது படத்தை பத்தின விஷயம் எனவே படத்தை பற்றி மட்டும் கேளுங்க” என சொன்னதற்கு அருண் விஜய்யும் “ம்ம்” என ஆமோதித்தார். பின்னர் எந்த பதிலையும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories