கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு விவாகரத்து! இளையராஜாவை எதிர்த்து மூன்றாம் கல்யாணம்! நடந்து என்ன

0
கடந்த மூன்று  ஆண்டுகளில் இரண்டு விவாகரத்து! இளையராஜாவை எதிர்த்து மூன்றாம் கல்யாணம்! நடந்து என்ன

தமிழ் சினிமாவில் இசைஞானியாக திகழ்ந்து வருவர் இளையராஜா. தனக்கு பின் தன் மகன்களும் இசையில் ஜாம்பவான்களாக திகழ வேண்டும் என்று அவர்களையும் இசையில் படிக்க வைத்து தற்போது மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளனர்.

அந்தவகையில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதர்வை பெற்று விளங்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இசையில் அப்பாவுக்கு சம மனநிலையில் வைத்திருந்த யுவன் இளையராஜாவை போல் திருமண வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்து வந்தார். இரு முறை திருமணம் செய்த யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.2002 ஆம் ஆண்டு யுவன் லண்டனில் நடந்த ஒரு இசை கச்சேரிக்கு சென்ற போது அங்கு சுஜயா என்பவரின் பழக்கம் ஏற்பட்டு 2003ல் லண்டனிலேயே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார். அதன்பின் 2005ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தார். திருமணமாகிய மூன்று ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சுஜயாவை 2008ல் விவாகாரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் சில ஆண்டுகள் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த யுவன் ஷில்பா என்பவரை 2011ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஷில்பாவுடன் மூன்று ஆண்டுகால திருமண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்து விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பின் கடந்த 2015ல் ஜப்ருன் நிஷா என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்காக குடும்பத்தினரையும் பகைத்துக்கொண்டு ஜப்ருன் நிஷாவை மதமாறி திருமணம் செய்து கொண்டார். தன் பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக்கொண்டார். தற்போது ஹியா யுவன் என்ற ஒரு மகளுடன் மூன்றாம் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இதன்பின் இளையராஜாவுக்கும் யுவனுக்கும் சில சங்கடங்கள் ஏற்பட்டதாகவும் 80 வயதை அடைந்த இளையராஜாவுக்கு நடைபெற்ற சதாபிஷேகத்திற்கு கூட யுவன் இதனால் வராமல் இருந்துள்ளார் என்ற வதந்தி பரவியது. ஆனால், மதமாறியுள்ளதால் மற்ற மதம் சார்ந்த சடங்குகளில் முஸ்லீம்கள் வழிப்படக்கூடாது என்ற காரணத்தால் தான் யுவன் வரவில்லை என்றும் கூறப்பட்டது.

No posts to display