விஷாலின் மீது கத்தி, கம்புகளுடன் 100பேர் சேர்ந்து தாக்குதல்!! படப்பிடிப்பு நிறுத்தம் !!வைரலாகும் புகைப்படம்

0
விஷாலின் மீது கத்தி, கம்புகளுடன் 100பேர் சேர்ந்து தாக்குதல்!! படப்பிடிப்பு நிறுத்தம் !!வைரலாகும் புகைப்படம்

லத்தி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கிய தமிழ் நடிகர் விஷால் மீண்டும் படப்பிடிப்பில் காயம் அடைந்துள்ளார். தீவிரமான ஆக்‌ஷன் காட்சிக்காக நடிகரின் படப்பிடிப்பில் இருந்தபோது, ​​​​அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் இரவு, பகலாக நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20 நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30 நாட்கள், ஸ்டண்ட் காட்சி பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைப்பில் புது இயக்குநர் வினோத்குமார் டைரக்‌ஷனில் மிக பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படப்பிடிப்பு பாழடைந்த பில்டிங்கில் படமாக்கப்பட்டது. அப்போது நடிகர் விஷாலுக்குக் கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு கேரளாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்து கொடுத்தார். அதே போல் தற்போது மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சி சென்னையில் இரவு பகலாக படபிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விறுவிறுப்பாக அடுத்தடுத்து ஓய்வின்றி , இரவு பகலாக படப்பிடிப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படப்பிடிப்பில் கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிகர் விஷால் நடிக்கிறார். அந்த நேரத்தில் அவரை மறித்து 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தித் தாக்க ஆரம்பிக்கின்றனர். விஷால் தைரியமாகக் கீழே இறங்கி அவர்களை அடித்துத் தாக்கிக் கொண்டு கைதியைப் பிடித்துச் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இக்காட்சியில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிக்கொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாகக் காலில் நிஜமாகவே அடிபட்டு விட்டது. நடிகர் விஷால் அப்போது துடிதுடித்து கீழே விழுந்து விட்டார்.

படப்பிடிப்பு தளத்திலேயே உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், எலும்பு முறிவு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபி மூலமே சரிசெய்து விடமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மீண்டும் பரிசோதிக்கப்பட்டு வலி இல்லையெனில் நடிகர் விஷால் வழக்கம் போல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று மாலை நேரப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

லத்தி படத்தை ஏ வினோத்குமார் இயக்குகிறார் மற்றும் சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரமணா மற்றும் நந்தாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எம் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு எம் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, பொன் பார்த்தீபன் வசனம் எழுதியுள்ளார்.

No posts to display