
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரரும், பிரபல நடிகருமான நரேஷ், நடிகை பவித்ரா லோகேஷை காதலிப்பதாக கூறப்படுகிறது. காதலை மறுத்த தம்பதியினர் பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி, மைசூரில் உள்ள ஹோட்டல் அறையில் தனது கணவரையும், பவித்ரா லோகேஷையும் கையும் களவுமாக பிடித்தார். அங்கு தர்ணா நடத்திய அவர், நடிகர், நடிகைகளை வெளியேறுமாறு ஓட்டல் நிர்வாகம் கூறியது.
நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் அறையை விட்டு வெளியே வந்ததும், ரம்யா ரகுபதி தனது காலில் இருந்து கழற்றிய செருப்பால் தாக்கியதுடன், அவர்களை கடுமையாக வார்த்தைகளால் திட்டினார். காரில் செல்லும் வழியில் நரேஷ், ரம்யாவுக்கு ராகேஷ் ரெட்டி என்ற ஒருவருடன் முறைகேடான தொடர்பு இருப்பதாகவும், அவரது இமேஜை கெடுக்க இருவரும் சேர்ந்து திட்டமிட்டு உடல்ரீதியாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கணவர் நரேஷ் பாபு மீது புகாரளித்துள்ளார். இதையடுத்து, எங்களுக்குள் பிர்ச்சனை வர பவித்ரா லோகேஷ் தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
தன் கணவர் வேறொரு பெண்ணுடன் மைசூரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றில் தனிமையில் தங்கியிருந்ததாக கூறி ரம்யா அந்த இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற 3வது மனைவி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து போலிஸார் அங்கு வந்து சமாதானம் செய்ய முயற்சித்த சமயத்தில் ரம்யா டகுபதி செருப்பை கழட்டி நரேஷ் பாபுவை அடிக்க சென்றுள்ளார். இதற்கு நரேஷ் பாபு விசில் அடித்தபடி பவித்ரா லோகேஷை அழைத்துக்கொண்டு சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Me Abandoning all the Works and Going into Theatres ❤️#Naresh #Pavithra pic.twitter.com/4XxissiJLZ
— 🫴𝐏𝐬𝐲𝐂𝐡𝐨𝐰🕊️ (@Wishnuvv) July 3, 2022