நடிகை மீனா வாழ்க்கையில் விளையாடிய விதி! தீயாய் பரவும் திருமண நாள் பதிவு – கண்ணீர் விடும் ரசிகர்கள்

0
நடிகை மீனா வாழ்க்கையில் விளையாடிய விதி! தீயாய் பரவும் திருமண நாள் பதிவு – கண்ணீர் விடும் ரசிகர்கள்

நடிகை மீனா தனது ஃபேஸ்புக் கணக்கில் தனது கணவரின் மரணம் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

meena husband

நடிகை மீனாவின் கணவரின் இழப்பு அவருக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் தாங்கி கொள்ள முடியாத சோகம்.இன்னும் இரண்டு வாரத்தில் மீனாவின் திருமண நாள் வரவுள்ளது.

இந்த நிலையில் மீனா கடந்த ஆண்டு திருமண நாளின்போது பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவை ரசிகர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மீனா தனது கணவரை எப்படி நேசித்து இருக்கிறார் என்பது கடந்த ஆண்டு அவரது திருமண நாளின்போது பதிவு செய்த இந்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து தெரிய வருகிறது.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

வானவில் போல என் வாழ்வில் வந்து சேர்ந்து அதை அழகாக வண்ணமயமாக்கி விட்டாய், நீ எனக்கு அளித்த புன்னகையை எப்போதும் அணிந்துகொள்வதற்கான அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த இடம் என்று பதிவு செய்துள்ளார்.

இன்னும் 12 நாளில் மீனாவின் திருமண நாள் வர இருக்கும் நிலையில் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய சோகத்தினை கொடுத்து விதி விளையாடி வருகின்றது. இதனை எண்ணி ரசிகர்களும் கண்ணீர் சிந்தி வருகின்றனர்

No posts to display