அடி தூள் அஜித் 61 படத்தை பற்றி வெளியான புதிய மாஸ் அப்டேட் !!

0
அடி தூள் அஜித் 61 படத்தை பற்றி வெளியான புதிய மாஸ் அப்டேட் !!

‘ஏகே61’ படப்பிடிப்பு அட்டவணை இடைவேளையில் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகளுக்கு பைக் டூர் புறப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. வரவிருக்கும் படம் எச் வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்றும் போனி கபூர் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அஜித்தின் 61வது படமாக உருவாகி வருகிறது. மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படி இருக்கையில், அஜித் தற்போது நடித்து வரும் தனது AK61-படத்திற்கு எப்படி தலைப்பு வைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது அதற்கான ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, அஜித் 61-வது படத்திற்கும் V எழுத்தில் தொடங்கும் தலைப்பு தான் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அனேகமாக வீரா என்ற தலைப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 61-வது படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடித்து விட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் கதை வங்கி கொள்ளை தொடர்பான கதை என்றும், அதில் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வந்தது. இப்போது கூடுதலாக இது வங்கி கொள்ளை கதை தான், அதுவும் உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது ஒரு பரபரப்பான கதை என்பதால் படத்தில் பாடல்கள் இல்லை என்றும், தீம் மியூசிக் மட்டுமே பிரதானமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Ajith 61

சுமார் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சு வாரியர் நடிகர்களுடன் இணைந்துள்ளார், வினோத் தற்போது அல்டிமேட் ஸ்டார் தவிர்த்து மற்ற நடிகர்கள் இடம்பெறும் பகுதிகளை படமாக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ‘AK61’ டிசம்பர் 2022 இல் வெள்ளித்திரையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display