
யானை படத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சமுத்திரக்கனி, யோகி பாபு, புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
யானை அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
முதல் காட்சி பார்த்துவிட்டு ஹரி கம்பேக் என்று கூவினாலும், சாமி, தாமிரபரணி, சிங்கம் போன்ற படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த படக் விமர்சனம் அடுத்தடுத்த காட்சிகளில் கலவையாக வந்தது.
யானை 400 தியேட்டருக்கு மேல் ரிலிஸாகிருந்தாலும், வசூல் இரண்டு நாட்களில் ரூ 10 கோடி வரை வரவில்லை என கூறப்படுகிறது. இவை படத்தின் எதிர்ப்பார்ப்பிற்கு மிக குறைந்த வசூல் தானாம்.