தனது பேரனோடு உடல் மெலிந்து அமெரிக்காவில் சிகிச்சையில் டி.ஆர் வைரல் புகைப்படம் இதோ !

0
தனது பேரனோடு உடல் மெலிந்து அமெரிக்காவில் சிகிச்சையில் டி.ஆர் வைரல் புகைப்படம் இதோ !

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் தந்தையான இயக்குனர் டி. ராஜேந்தர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சிம்புவும் வெளியிட்ட அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தனது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும். மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

டி ராஜேந்தர் அங்கு இரண்டு வாரம் சிகிச்சை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வதந்திகளை பற்றி நம்ப வேண்டாம். என் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் டி. ராஜேந்தர் சிகிச்சை முடிந்து தங்கும் விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவரோடு, மகன்களான, சிலம்பரசன் மற்றும் குறளரசன் மகள் இலக்கியா ஆகியோர் உள்ளனர். மேலும், இலக்கியாவின் மகன் சேஷன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொடர்ந்து விரைவில் சிகிச்சைகளை முடித்துகொண்டு டி.ராஜேந்தர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

No posts to display