29 C
Chennai
Monday, February 6, 2023
Homeசினிமாபெருத்த தொகை கொடுத்து போயஸ் கார்டன் ல் வாங்கிய நயன்தாரா விக்கி...

பெருத்த தொகை கொடுத்து போயஸ் கார்டன் ல் வாங்கிய நயன்தாரா விக்கி வசிக்கும் புதிய வீட்டில் என்ன இருக்கிறது தெரியுமா ?

Date:

தொடர்புடைய கதைகள்

பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தின் ட்ரெய்லர்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை ஸ்டாலின்...

சமீபத்தில் பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு...

வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே வீடியோ பாடல் இதோ...

வாரிசு படத்தின் ரஞ்சிதாமே வீடியோ பாடலை தயாரிப்பாளர்கள் திங்கள்கிழமை சமூக...

அட்ரா சக்க! சிறப்பான தரமான 2 சம்பவம் தயார்!...

நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில்...

வெற்றி மாறனும் ஜூனியர் என்டிஆரும் இணையும் படத்தை பற்றிய...

வெற்றி மாறன் மற்றும் ஜூனியர் என்டிஆர் விரைவில் ஒரு திட்டத்தில் இணைந்து...

நடிகை நயன்தாரா எட்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் முதலில் திருப்பதி சென்று பாலாஜியிடம் ஆசி பெற்றனர், பின்னர் நயனின் பெற்றோர் ஓமனா மற்றும் குரியன் கொடையது ஆகியோரை சந்திக்க கேரளாவில் உள்ள கொச்சின் சென்றனர்.

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த மதம் திருமணம் செய்து கொண்டனர், திருமணத்துக்கு பின்பு சுமார் 20 நாட்களை மகிழ்ச்சியாக கழித்தவர்கள், தற்பொழுது நயன்தாரா முன்பை படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார், விக்னேஷ் சிவன் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளில் தீவிரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர்களின் புதிய வீடு குறித்து சுவாரசியமான பல தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் பின் புறம், உள்ள ஒரு பிளாட்டில், மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை வாங்கியுள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர். இதில் ஒரு தளம் மட்டுமே சுமார் 9000 சதுர அடி என்றும், இரண்டு தளத்தையும் சேர்த்தால் சுமார் 18,000 சதுர அடி என்று கூறப்படுகிறது. இப்படி மிகப் பிரம்மாண்டமான பிளாட்டாக இது அமைந்துள்ள இந்த வீட்டின் இன்டீரியர் மற்றும் எஸ்ட்டேரியர் வேலைகளுக்கு மட்டும் பல கோடி செலவு செய்து வருகின்றனர்.

இந்த வீட்டை இன்டீரியர் காண்ட்ராக்ட்க்காக, மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய பிரபலம் நிறுவனம் ஒன்றுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் கொடுத்துள்ளார்கள், இந்த இன்டீரியர் காண்ட்ராக்டர்க்கு மட்டும் சுமார் 25 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தில் சிறப்பு என்னவென்றால், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்,

மற்றும் இது போன்ற மிகப்பெரிய பிரபலங்களின் வீடுகளுக்கு இன்டீரியர் வேலை செய்தவர்கள் தான் தற்பொழுது நயன்தாரா வீட்டிற்கு இன்டீரியர் காண்ட்ராக்ட் எடுத்துள்ளவர். இந்த வீட்டில் பாத்ரூம் மட்டுமே சுமார் 1500 சதுர அடி என்றும், அந்த பாத்ரூம் உள்ளேயே நீர்வீழ்ச்சி, இருவர் மட்டும் நீர் உள்ளே படுத்து கொண்டு ரிலாக்ஸ் செய்வது போன்ற தொட்டி , இது போன்ற சிறப்பு அம்சங்கள் அந்த பாத்ரூமில் அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உள்ளே நான்கு லிப்ட் உள்ளது, இதில் முன்றாவது தளத்திற்கு பணியாளர்கள் செல்வதற்கு ஒரு லிப்ட், நான்காவது தளத்திற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மட்டும் செல்வதற்கு ஒரு லிப்ட் அமைக்கப்ட்டுள்ளது. நான்காவது தளத்திற்கு பணியாளர்கள் அனுமதியில்லை, இங்கே நயன்தாரா – விக்னேஷ் இருவரும் மட்டுமே சுதந்திரமாக இருக்க உள்ளனர். தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும், ரஜினி, அஜித், விஜய் போன்றோர் வீடுகள் கூட இந்த அளவுக்கு சசிறப்பு அம்சங்கள் கிடையாது.

மேலும் நயன்தாரா வீட்டின் உள்ளே நவீன திரையரங்கு ஓன்று அமைக்கப்படுகிறது. ஜெயலலிதா மீது மிகவும் மரியாதை உள்ள நயன்தாரா, அதனால் தான் ஜெயலலிதா வசித்த அந்த போயஸ் கார்டனில் அவர் வீடு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா வீட்டின் சிறப்பு அம்சங்களை கேள்விப்பட்ட சினிமா துறையினர் வாயை பிளந்து ஆச்சரியத்துடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

vigneshivannayanthara

சமீபத்திய கதைகள்