தனது ரசிகர்களுக்கு ஜொமேட்டோ விருந்து வைத்த ராக்ஸ்டார் அனிருத்..!!

0
தனது ரசிகர்களுக்கு ஜொமேட்டோ விருந்து வைத்த ராக்ஸ்டார் அனிருத்..!!

இசை அமைப்பாளர் அனிருத் ஜொமேட்டோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய ‘சும்மா செம்ம’ என்னும் பெப்பி உணவு பாடல் யூடியூப்பில் தற்போது 70 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் ஜொமேட்டோ நிறுவனத்திடம் அவர் ட்ரீட் கேட்டார். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால் எனக்கு மட்டும் போதாது, என் ரசிகர்களுக்கும் வேண்டும் என்றார். ஜொமேட்டோ நிறுவனம் அதற்கும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி சுவாரசியமாக பதில் அளிக்கும் 100 ரசிகர்களுக்கு பிஸ்சா ட்ரீட் என்று அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நகைச்சுவையான பதில்களுடன் ட்விட்டரில் இணைந்தனர். 100 வித்யாசமான பதில்களை ஜொமேட்டோ தேர்ந்தெடுத்து, இலவசமாக உணவை பரிசாக அளித்து தனது ரசிகர்களை உபசரிக்க வேண்டும் என்று அனிருத் அன்புடன் கேட்டுக் கொண்டார்.

மேலும் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைத்து ரசிகர்களுக்கும் தங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்ய விளம்பரக் குறியீட்டை வழங்கியது ஜொமேட்டோ.

அனிருத் தான் தற்போது கோலிவுட்டின் ராக்ஸ்டார். அவர் இசையில் அனைத்து ஆல்பங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. அவருக்கு தனது நகரத்தை எப்படி தனது பாட்டிற்கு நடனம் ஆட வைக்க வேண்டும் என்றும் தனது ரசிகர்களை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்றும் நன்றாக தெரியும். அவரின் இந்த வெற்றி பயணம் என்றும் தொடர வேண்டும் என்று அவர் ரசிகர்களை போல நாமளும் வாழ்த்தி அவர் பாடல்களை கேட்டு மகிழலாம்.

No posts to display