Friday, April 19, 2024 6:03 pm

சிவாஜியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவற விட்ட அஜித் !! பலரும் அறியாத உண்மை தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘நடிகர் திலகம்’ ‘நடிப்பு சக்ரவர்த்தி’ என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என்றே சொல்லலாம். அப்படி ஒரு நடிகர் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆகி கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாம் வரலாற்றில் படிக்கும் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக நடித்து காட்டியவர். மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜன் சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்று பல தலைவர்களை நம் கண்முன் காட்டியவர் சிவாஜி கணேசன். அவருடன் தற்போது முன்னணி நடிகர்களாக பார்க்கப்படும் ரஜினி, கமல், விஜய் அனைவரும் நடித்துள்ளனர்.

ரஜினி படையப்பா படத்திலும், கமல் தேவர் மகன் படத்திலும் விஜய் ஒன்ஸ்மோர் படத்திலும் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்தனர். ஆனால் இந்த வாய்ப்பு அஜித்துக்கு மட்டும் கிடைக்காமல் போனது. ஏய், பகவதி போன்ற படங்களை இயக்கிய வெங்கடேஷ் அவர்கள் சிவாஜி நடிப்பில் “பூவே பூச்சூடவா” என்ற படத்தை இயக்க இருந்தார். மேலும், இந்த படத்தில் விஷாலின் அண்ணன் ஹீரோவாக நடித்து இருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் கூட கூறி இருந்தார்கள். ஆனால், வேறு ஒரு தயாரிப்பாளர் வெங்கடேஷ் இயக்க வாக்கு கொடுத்து விட்டாராம். அதனால் தான் இந்த படத்தை இயக்க முடியாமல் போனதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இதன்பிறகு அஜித் சிவாஜி கணேசனுடன் நடிக்க முடியாமலே போனது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்