சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் மாஸ் கூட்டணி !! அதிரும் திரையுலகம்

0
சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன்  இணையும் மாஸ் கூட்டணி !! அதிரும் திரையுலகம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸைப் போல் கோலிவுட் நடிகர் அஜீத்துக்கும் அறிமுகம் தேவையில்லை. இருவரும் தொழில்முறை வாழ்க்கையை மிஞ்சிய பந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக அஜித்தின் தீனா திரைப்படத்தில் மெகாஃபோனைக் கையாண்டதன் காரணமாக இது மறுக்க முடியாதது. 2001 ஆம் ஆண்டில், அஜித்தின் திரைப்படத்தின் மூலம் மாவீரன் இயக்குனர் அறிமுகமானார், இது ஹிந்தியில் ஜிகர்வாலா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

vinodh ajith

இந்நிலையில் மீண்டும் வலிமை கூட்டணியில் உருவாகிவரும் படம் AK61. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் புனேவில் நடக்க உள்ளது.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் கடைசியாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கியிருந்தார்.

Ajith 61

இப்படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்து வந்தார். அப்போது அடுத்ததாக அஜித் படத்தை இயக்குவதை விக்னேஷ் சிவனே உறுதி செய்தார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதாவது AK63 படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய்க்கு துப்பாக்கி, சர்கார், கத்தி என வெற்றிப் படங்களை ஏ ஆர் முருகதாஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த தீனா படத்தின் மூலம்தான் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே கூட்டணியில் AK63 படம் உருவாக உள்ளது.

மேலும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் தீனா படத்தைப்போல் ஒரு மாசான படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

கடைசியாக தர்பார் படத்தில் ரஜினிகாந்தை இயக்கிய முருகதாஸ், தற்போது அஜித்தின் படத்திற்கான நல்ல ஸ்கிரிப்டை கொண்டு வர கால அவகாசம் எடுத்து வருகிறார்.

No posts to display