இணையத்தில் வைரலாகும் தி வாரியர் படத்தின் டிரைலர் இதோ !!

0
இணையத்தில் வைரலாகும் தி வாரியர் படத்தின் டிரைலர் இதோ !!

ரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி வாரியர்’. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

காவல்துறை அதிகாரியாக ராம் பொத்தினேனி அதிரடியாக நடித்திருக்கும் இந்த படத்தில், பல திரைப் படங்களில் ஹீரோவாக நடித்த ஆதி வில்லனாக மிரட்டியிருக்கிறார். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்திருக்கும் நிலையில் நதியா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் ஒவ்வொரு வசனமும் பக்கா மாசான வகையில் உள்ளது என்பதும் அதேபோல் ஹீரோ மற்றும் வில்லன் மோதும் காட்சிகள் அனல் பறக்க வைக்கும் என்பது டிரைலரில் தெரிய வருகிறது.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் களமிறங்கியிருக்கும் லிங்குசாமிக்கு இது ஓர் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘தி வாரியர்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், டிரைலர் பார்ப்பவர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No posts to display