அஜித்திற்கு கொக்கி போடும் நடிகர் கார்த்தி !! ஓகே சொல்லுவாரா அஜித்

0
அஜித்திற்கு கொக்கி போடும் நடிகர் கார்த்தி !! ஓகே சொல்லுவாரா அஜித்

2019 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று நாசர் தலைமையிலான அணி கடந்த மார்ச் மாதம் புதுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. நாசர், பாக்யராஜ் என இரு தலைமையிலான அணிகள் போட்டி போட்டது.அதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இதில் தலைவராக நாசர், பொதுச் செயலராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்டோர் வெற்றி பெற்று அணிகளை வழி நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் சங்க 66 வது பொதுக் குழு கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அந்த பொதுக் குழு கூட்டத்தில் பல விஷயங்கள் பற்றி கலந்தாலோசித்தனர். அதில் கூறிய செய்திகள் பின்வருமாறு: கட்டிட பணிகள் இன்னும் 40 % வரை நடைபெற வேண்டியிருக்கிறதாம். அதற்காக 30 கோடி செலவாகும் என கூறியுள்ளனர்.

எனவே, வங்கிக் கடன் பெற்று, கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, நடிகர், நடிகைகளிடமுடம் நிதி திரட்ட போவதாக கூறினார்களாம். இன்னும் 3 மாதங்களுக்குள் கட்டிட வேலையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கார்த்தி ஒரு திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. என்னவெனில் ஏற்கெனவே நடிகர் சங்கம் கடனில் இருப்பதால் இன்னும் வங்கிக் கடன் பெறுவது என்பது சாத்தியப்படாது எனவும் அதற்கு பதிலாக விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோரை சந்தித்து ஆளுக்கு 2 கோடி முதல் வசூல் செய்து கட்டிடத்தை கட்டி விடலாம் என கூறிவருகிறாராம். அதற்காக ரஜினி, கமல், விஜயிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம் கார்த்தி. அஜித்தை மட்டும் சந்திக்க முடியவில்லையாம்.ஆகையால் அவரை நேரில் சூட்டிங் ஸ்பாட்டிற்கே போய் சந்தித்து விடலாம் என முடிவு செய்துள்ளாராம்.

No posts to display