Tuesday, April 16, 2024 10:05 am

யானை படத்தின் திரைவிமர்சனம் இதோ !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

Yannai Movie Review ‘யானை’ இறுதியாக நாளை ஜூலை 1 ஆம் தேதி பெரிய திரையில் வருகிறது. படத்திற்கான முன்பதிவுகள் பல மையங்களில் ஆரம்பமாகிவிட்டன, மேலும் படம் ஒரு சில இடங்களில் சிறப்புக் காட்சிகளைப் பெற்றுள்ளது. ஆக்‌ஷன் என்டர்டெய்னர் பிரமாண்ட திறப்பு விழாவிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதிரடி- திரில்லர் – குடும்பத் திரைப்படம். இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், புகழ், கங்கை அமரன் என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஊருக்குள் கௌரமாக வாழ்ந்து வரும் பிஆர்வி குடும்பத்தின் இளைய மகனாக வரும் ரவி { அருண் விஜய் }, குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். என்னதான், அருண் விஜய் தனது அண்ணன்களை உடன்பிறந்தவர்கள் என்று பார்த்தாலும், அவர்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவன் தான் என்று நினைக்கிறார்கள்.

இப்படி ஒரு புறம் கதை நகர, மற்றொரு புறம், பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பாகையை தீர்த்துக்கொள்ள, ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார், வில்லன் லிங்கம் { ராமச்சந்திர ராஜு }. பகையை சுமுகமாக முடிக்க நினைக்கும் அருண் விஜய், அதற்கான பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இந்த சமயத்தில், பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நடக்கிறது.

இதில் சிக்கிக்கொள்ளும் அருண் விஜய், தனது அண்ணன்களின் கண்களுக்கு விரோதியாக தெரிய, உடனடியாக வீட்டை விட்டு அண்ணன் சமுத்திரக்கனியால் வெளியேற்றப்படுகிறார் அருண் விஜய். இதன்பின், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? பகையுடன் திரிந்துகொண்டிருந்த லிங்கம், பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தார்? அருண் விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..

கையில் மாலையும் படத்தில் என்ட்ரி கொடுத்து, நடிப்பில் மாஸ் காட்டியுள்ளார் அருண் விஜய். ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார். கதாநாயகியாக வரும் பிரியா பவானி ஷங்கர், கதைக்களத்துடன் சேர்ந்து பயணித்து அழகாக நடித்துள்ளார்.

நடிகை ராதிகா தனது அனுபவ நடிப்பை எதார்த்ததுடன் சேர்த்து காட்டியுள்ளார். அண்ணனாக வரும் சமுத்திரக்கனி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அதற்கு தனி பாராட்டு. வில்லனாக வந்து, கடைசியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் நடிகர் ராமச்சந்திர ராஜு.

நடிகை அம்மு அபிராமியின் நடிப்பு படத்திற்கு பலம். யோகி பாபு நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், படத்துடன் ஒன்றிப்போகிறார். மற்றபடி, அப்பாவாக வந்த நடிகர் ராஜேஷ், அண்ணன்களாக வந்த போஸ் வெங்கட், சஞ்சீவ், ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

இயக்குனர் ஹரியின் இயக்கம் சூப்பர். ஆனால், திரைக்கதை சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது. நன்றாக நகரும் திரைக்கதையில் தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகளும், பாடல்களும் படத்தின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துகிறது. அதை தவிர்த்து இருந்தால், படம் இன்னும் கைதட்டல்களை அள்ளியிருக்கும்.

ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் பெரிதளவில் ஒர்கவுட் ஆகவில்லை. ஆனால், பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்கிறது. முக்கியமாக சண்டை காட்சிகளுக்கு அமைத்திருக்கும் பின்னணி இசை சூப்பர். எஸ். கோபிநாத்தின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. ஆண்டனியின் எடிட்டிங் பக்கா. அனல் அரசின் ஸ்டண்ட் மாஸ்.திரைக்கதையில் சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது

தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகள், பாடல்கள்மொத்தத்தில், கமெர்ஷியல் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாக அமைத்துள்ளது ‘யானை’

- Advertisement -

சமீபத்திய கதைகள்