
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் சாய் பல்லவி. தமிழ் பேசும் நடிகையாக தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்த சாய் பல்லவி தனுஷின் விஐபி 2 படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இதையடுத்து சூர்யாவின் NGK படத்திலும் நடித்தார். இதையடுத்து நானி நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடித்தும் இருந்தார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள சந்திரமுகி 2 படம் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் எம் எம் கீரவேணி இசையமைக்கவுள்ள நிலையில் படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை சாய் பல்லவியிடம் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் பி வாசு பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் சாய் பல்லவி கதையில் சில மாற்றங்களை கூறி ஓவர் பந்தாவாக பேசியிருக்கிறாராம். இதனால் கடுப்பான பி வாசு வேறொரு நடிகையை பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி நடையை கட்டியுள்ளாராம். இந்த தகவல் எவ்வளவு உண்மையானது என்று படக்குழு வெளியீட்டில் தான் இருக்கிறது.