சிம்பு நடித்த பத்து தல படத்தின் ரீலிஸ் தேதி இதோ !!

0
சிம்பு நடித்த பத்து தல படத்தின் ரீலிஸ் தேதி இதோ !!

கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் படம் தான் ‘பத்து தல’ . இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘பத்து தல’ படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 45 நாள் தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

simbu

No posts to display