இறக்கும் போது மீனா கணவரின் உடம்பில் தழுப்பு காயமா? கடைசியாக மகளிடம் பேசியது என்ன? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்

0
இறக்கும் போது மீனா கணவரின் உடம்பில் தழுப்பு காயமா? கடைசியாக மகளிடம் பேசியது என்ன? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்

நடிகை மீனாவின் கணவர் உடம்பில் காயம் என்றும் மீனாவிற்கும், வித்யாசாகருக்கும் பிரச்சினை என்றும் மகளிடம் கடைசியாக போனில் பேசினார் என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர்… இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ல் திருமணம் நடந்தது. நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

நேற்றைய தினம் மீனா உதவிக்கு ஆண் துணை இல்லாமல் கணவருக்கான இறுதி காரியத்தினை செய்து, இறுதியில் கணவரை கட்டிப்பிடித்து அழுததும், அவரது அஸ்தியை கையில் வாங்கி வந்த காட்சியும் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில் கணவர் இருந்த துக்கத்தில் இருக்கும் மீனாவை குற்றப்படுத்தும் விதமாக கருத்துக்களை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

அதாவது மீனாவின் கணவர் மூன்று மாதங்களாக சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவம், மகளிடம் “அப்பா பிழைப்பது கடினம்.. அம்மா பேச்சை கேட்டு இனி சமத்தா நடந்துக்கணும்” என்று சொல்லி, போனிலேயே முத்தம் தந்ததாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் சாகர் உடம்பில் காயம் இருந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரின் உடம்பில் எப்படி காயம் ஏற்படும் என்றும் மரணத்தில் மர்மம் என்றும் பரப்பி வருகின்றனர்.

வித்யாசாகர் குடும்பத்தில் ஜனவரி மாதம் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் எதுவும் இல்லாமல் மைல்டாகவே இருந்துள்ளது. மீனாவின் தாய் வயதானவர் என்பதால் அவரை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பின்பு அனைவருக்கும் உடல்நிலை சரியானது.

பிப்ரவரி மாதம் மீனாவின் தாய் பிறந்தநாளை கலா மாஸ்டர் குடும்பமும், மீனாவின் குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடியுள்ளனர். அப்பொழுது எந்தவொரு உடல் பிரச்சினை இல்லாமல் சாகர் நன்றாகவே இருந்துள்ளார்.

அதன்பின்பு சில தினங்கள் கழித்து சிறிது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று வெளியே சரியாக தெரியாமல் இருந்துள்ளது.

அத்தருணத்தில் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்த சாகருக்கு மார்ச் 24ம் தேதி மீண்டும் ஆக்சிஜன் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், அதன்பின்பே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மருத்துவ சோதனை செய்ததில் நுரையீரல் தொற்று என்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே பல முறை நுரையீரல் தானமாக கிடைத்தும் சாகரின் உடம்பிற்கு ஏற்றதாக அமையாதது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வரை சுயநினைவுடனும், தைரியமாகவும் சாகர் இருந்துள்ளாராம். மேலும் மீனாவும் கணவரை காப்பாற்ற பல முயற்சிகளையும், போராட்டத்தினையும் சந்தித்துள்ளாராம்.

இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு அதிக மன அழுத்தத்திற்கு சென்றதால், இதயத் துடிப்பும் குறைய தொடங்கியுள்ளது. அதன் பிறகே மருத்துவர்கள் காப்பாற்ற முடியாது என்று கூறியதாகவும், இறப்பதற்கு முதல் நாளே தான் மருத்துவமனைக்கு சென்றுவிட்டதாகவும் கலா மாஸ்டர் கூறியுள்ளார்.

மேலும் இருவருக்குமிடையே இருந்த பாசம் அளவு கடந்தது. மீனாவை கணவர் தங்கத்தட்டில் வைத்து தாங்கினாராம்.

தந்தையின் இறப்பிற்கு பின்பு நைனிகா குறித்து கேட்டதற்கு, மிகவும் அமைதியாகிவிட்டதாகவும், அவள் எதுவும் பேசாமல் இருந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இணையத்தில் பரவி வந்த தவறான தகவலுக்கு கலா மாஸ்டர் மிகச்சரியாக பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

No posts to display