அஜித் விஜய் இருவரில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் ? இயக்குனர் கௌதம் மேனன் கூறியது யாரை தெரியுமா

0
அஜித் விஜய் இருவரில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் ? இயக்குனர் கௌதம் மேனன் கூறியது யாரை தெரியுமா

தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அதிக ரசிகர்கள் பட்டாலத்தை கவர்ந்து வைத்துள்ளது ஒரு சில நடிகர்கள் மட்டுமே அதிலும் குறிப்பாக அஜித் விஜய் போன்றவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித் தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளது. இப்படி இருக்க அஜித் விஜயின் அடுத்த அடுத்த படத்தை இயக்க பல்வேறு இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர் இந்த நிலையில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த படம் வெகு விரைவிலே வெளிவர இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் கௌதம் மேனன் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக விஜய் அஜித் யாரை பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளனர் சற்றும் யோசிக்காமல் இயக்குனர் கௌதம் மேனன் விஜய் என கூறினார்.

கௌதம் மேனன் அஜித் என்னை அறிந்தால் படத்தை எடுத்துள்ளார் ஆனால் விஜயை வைத்து ஒரு படம் கூட இயக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ரஜினி, கமல் யாரை பிடிக்கும் என கேட்டுள்ளனர் அதற்கு கமல் தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.

No posts to display