பிக் பாஸ் சீசன் 6 முதல் போட்டியாளராக களமிறங்கும் மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்! நீங்களே பாருங்க

0
பிக் பாஸ் சீசன் 6 முதல் போட்டியாளராக களமிறங்கும் மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்! நீங்களே பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ். கடந்த பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகும் போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய கமலஹாசன் அதன் பின்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார்.

அதனால் சிம்புக்கு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதனால் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இந்நிலையில் விக்ரம் வெற்றிக்களிப்பில் இருக்கும் கமலை விஜய் டிவி தொடர்புகொண்டு பேசி உள்ளது. அப்போது கமல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களை தெரிவுசெய்யும் வேலையில் நிகழ்ச்சி குழு மும்மரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகரும் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பளருமான ரக்சன் இம்முறை போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பன்முக திறமைகளை கொண்ட ரக்சன் தனக்கான பிளாட்போர்ம் கிடைக்க கடுமையாக போராடிவரும் நிலையில் பிக் பாஸ் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரக்சன் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குக் வித் கோமாளி போட்டியாளரும், பாரதி கண்ணம்மா தொடரின் முன்னாள் நடிகையுமானான ரோஷ்னி ஹரிப்ரியன் உடன் தற்போது பேர்ச்சுவரத்தை நடந்துவருவதாக இன்னொரு தகவல்கள் வெளியாகியுள்ளன.

No posts to display