பிரபல இயக்குனருக்கு ஒகே சொன்னாரா அஜித் !! AK63 படத்தை இயக்கப்போதுவது இவரா ? வைரலாகும் தகவல்

0
பிரபல இயக்குனருக்கு ஒகே சொன்னாரா அஜித் !! AK63 படத்தை இயக்கப்போதுவது இவரா ? வைரலாகும் தகவல்

ஆரம்ப காலத்தில் ஒரு பைக் மெக்கானிக்கராக இருந்து அதன் பின்னர் தன்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி அதனைத் தொடர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவரே நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ‘ஆசை’ என்ற திரைப்படம் தான்.

நடிப்பையும் மிஞ்சி இவரது அழகுக்கு மயங்காத பெண் ரசிகர்களே இல்லை என்று தான் கூற முடியும். அமராவதியில் ஆரம்பித்து வலிமை வரைக்கும் பல படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கின்றார். இவர் நடித்த பல படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழையும் பரப்பி இருக்கின்றன.

vinodh ajith

இவர் நடிப்பில் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் ஆர்வம் மிக்கவர். இதற்கு உதாரணமாக 2014-ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து உதவி செய்து இருப்பதைக் குறிப்பிட்டு கூறலாம்.

இவ்வாறாக சமூக சேவைகளில் மட்டுமல்லாது படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த ‘வலிமை’ படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இவ்வாறாக இருக்கும் போது நடிகர் அஜித்தின் 62-ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

Ajith 61

இந்நிலையில் அஜித்தின் 63-ஆவது படத்திற்கான அப்டேட்டும் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தை நடிகர் விஜய்க்கு ‘துப்பாக்கி, சர்கார், கத்தி’ என வெற்றிப்படங்களை பெற்றுக்கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். அத்தோடு அஜித்தின் திரையுலகப் பயணத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்த ‘தீனா’ படத்தினையும் இவரே இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளிற்கு பின்னர் AK63 படத்தின் வாயிலாக இக்கூட்டணி இணைந்துள்ளது. மேலும் இப்படமானது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கின்றது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது.


இதனைக் கேள்விப்பட்ட தல ரசிகர்கள் அஜித்தின் ‘தீனா’ படத்தை போன்று இதுவும் ஒரு மாசான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.

No posts to display