ஓஹோ இது தான் விஷயமா அவசர அவசரமாக அஜித் ஐரோப்பாவிற்கு செல்ல முக்கிய காரணமே இதுவா ? செம்ம சர்ப்ரைஸ்

0
ஓஹோ இது தான் விஷயமா அவசர அவசரமாக  அஜித் ஐரோப்பாவிற்கு செல்ல முக்கிய காரணமே இதுவா ? செம்ம சர்ப்ரைஸ்

அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஏற்கனவே ‘பிரின்ஸ்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய இரண்டு படங்கள் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், படம் டிசம்பரில் பெரிய திரைக்கு வரக்கூடும்.

இப்படத்தினை போனி கபூர் தயாரித்து வருவதாகவும் ஏற்கனவே உறுதியான தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்காக ஐதராபாத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஷுட்டிங் நடைபெற்று வந்தது. பட அறிவிப்பு வெளியாகிய சில நாளிலேயே அஜித், தனது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு பதிலாக நரைத்த நீண்ட தாடி, காதில் சிறிய கம்மல் என டோட்டலாக வேறு லுக்கிற்கு மாறினார்.

அத்தோடு கே 61 அப்டேட் கேட்ட ரசிகர்களுக்காக நீண்ட தாடியுடன் இருக்கும் அஜித்தின் நெகடிவ் போட்டோவை வெளியிட்டார். இதனால் அஜித் வில்லன் ரோலில் நடிக்கிறார். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என தகவல் பரவி வருகின்றது. இது தவிர அடுத்த கட்ட படப்பிடிப்பானது புனேயில் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏகே 61 ஷுட்டிங் ஜுலை – ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் முடித்து, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய போவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் அஜித் தற்பொழுது ஐரோப்பாவிற்கு பைக் டூர் கிளம்பி போய் விட்டார்வழக்கமாக ஒரு படத்தின் வேலைகளை முடித்து கொடுத்து விட்டு தான் அஜித் பைக் டூர் போவார்.

Ak61

ஆனால் தற்போது ஏகே 61 ஷுட்டிங்கை பாதியில் நிறுத்தி விட்டு போனதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது, தற்போது வரை அஜித் நீண்ட வெள்ளை தாடி, கூல் லென்ஸ், காதில் கம்மல் என்ற கெட்அப்பில் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏகே 61 கதைப்படி இது தான் வயதான காலேஜ் ப்ரொஃபசர் லுக்காம். இந்த லுக் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது.பிறகு, ரகசியமாக வைத்திருக்கும் அந்த புதிய லுக்கிற்கு மாற போகிறாராம் அஜித்.

இது தான் படத்தில் மெச மாஸாக இருக்க போகிறதாம். இந்த புதிய லுக்குடன், புது விதமான க்ளைமாக்சில் நடிக்க போகிறாராம். இந்த லுக்கிற்கு மாறிய பிறகு, படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, பைக் டூர் போனால் அந்த போட்டோக்களால் புதிய லுக் அனைவருக்கும் தெரிந்து, சர்ப்ரைஸ் போய் விடும். அதனால் தான் புது லுக்கிற்கு மாறுவதற்கு முன்பே பைக் டூர் கிளம்பி போய் விட்டாராம் என்று புதிய தகவல் வெளியாகிள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts to display