😨புறாவால் மரணமா ? திடீர் மரணத்திற்கு உண்மையான காரணம் | நடிகை மீனாவின் கணவர் காலமானார்

0
😨புறாவால் மரணமா ? திடீர் மரணத்திற்கு உண்மையான காரணம் | நடிகை மீனாவின் கணவர் காலமானார்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அணைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2009ல் பெங்களூரு சாஃப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகர் (48), என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற அழகான மகள் இருக்கிறார்.

நைனிகா விஜய்யின் தெறி படத்தின் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். இது இத்திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் அதிலிருந்து மீண்டும் அதன் பக்கவிளைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரது நுரையீரல் புறா எச்சத்தால் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு மாற்று நுரையீரல் பொருத்த சிகிச்சை நடைபெற்று வந்துள்ளது.

ஆனால், மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

No posts to display