உண்மையிலேயே மீனாவின் கணவர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமே இதுவா ? உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல் இதோ !!

0
உண்மையிலேயே மீனாவின் கணவர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமே இதுவா ? உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல் இதோ !!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாகவும் அவருக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் கமல்ஹாசன், அஜித், விஜய், சத்யாராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி இருந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துள்ளார் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுக்குறித்து அவரது உறவினர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று இறந்துட்டார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று, நுரையீரல் பிரச்சனை என பல்வேறு காரணங்களே இவரின் இறப்பிற்கு காரணம் என கூறப்படுகின்றது.

மேலும் இவருக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பதால் இவருக்கு இறப்பு சடங்குகள் செய்ய முடியாது இவரது உடலும் உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது கொரோன பாதுகாப்பு கவசங்களுடன் இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்பதால் தந்தையின் முகத்தை பார்க்கமுடியாமல் கதறிய மகள்

No posts to display