வீட்டிற்குள் புறா வளர்ப்பால் ஏற்பட்ட விளைவு- திடீர் மரணமடைந்த மீனாவின் கணவர்- வெளியான அதிர்ச்சி உண்மை இதோ !!

0
வீட்டிற்குள் புறா வளர்ப்பால் ஏற்பட்ட விளைவு- திடீர் மரணமடைந்த மீனாவின் கணவர்- வெளியான அதிர்ச்சி உண்மை இதோ !!

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார் மீனா.

அmத்தோடு மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுக்குறித்து அவரது உறவினர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் சோஷியல் மீடியா வாயிலாக மீனாவின் கணவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ரம்பா, கலா மாஸ்டர், நடிகர் சேரன் என பல பிரபலங்கள் நேரடியாக அவரின் இல்லத்திற்குச் சென்று தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்

No posts to display