கணவர் முகத்தை தொட்டுப்பார்த்து கட்டிப்பிடித்து இறுதி சடங்கில் மீனா பாசப்போராட்டம்

0
கணவர் முகத்தை தொட்டுப்பார்த்து கட்டிப்பிடித்து  இறுதி சடங்கில் மீனா பாசப்போராட்டம்

பிரபல நடிகை மீனா தன் கணவரை கட்டியணைத்து இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு அங்கிருந்தவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

நடிகை மீனா தகன மேடையில் இறுதி சடங்குகளை செய்தார் பின்னர் தன் கணவரை கட்டி அணைத்த மீனா கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

No posts to display