அதிரடியாக பில்கேட்ஸை சந்தித்த சூப்பர் ஸ்டார் நடிகர்! வைரலாகும் புகைப்படம்

0
அதிரடியாக பில்கேட்ஸை சந்தித்த சூப்பர் ஸ்டார் நடிகர்! வைரலாகும் புகைப்படம்
NEW YORK, NEW YORK - MAY 03: Bill Gates discusses his new book 'How To Prevent The Next Pandemic' onstage at 92Y on May 03, 2022 in New York City. (Photo by Michael Loccisano/Getty Images)

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் உலக பணக்காரர்களில் ஒருவராகிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் அவர்களை சந்தித்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு என்பதும் தெலுங்கு திரையுலகில் முன்னணி வகிக்கும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் மகேஷ்பாபு நடித்த ‘சர்க்காரு வாரி பாட்டா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அவர்களை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

NEW YORK, NEW YORK – MAY 03: Bill Gates discusses his new book ‘How To Prevent The Next Pandemic’ onstage at 92Y on May 03, 2022 in New York City. (Photo by Michael Loccisano/Getty Images)

மேலும் பில்கேட்ஸ் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த மகேஷ் பாபு குறிப்பிடுகையில், “திரு. பில் கேட்ஸ் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன்! இந்த உலகம் கண்ட மிகப் பெரிய தொலைநோக்கு பார்வையாளரில் ஒருவர்… மேலும் மிகவும் அடக்கமானவர்! உண்மையிலேயே அவரை சந்தித்தது ஒரு உத்வேகம் அளித்துள்ளது!!” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts to display