உண்மையிலேயே அஜித் அப்படி செய்ததற்கு மனதார நன்றி சொன்னேன் !! ..அது சம்பவம் இல்ல சரித்திரம்…

0
உண்மையிலேயே அஜித் அப்படி செய்ததற்கு மனதார நன்றி சொன்னேன் !! ..அது சம்பவம் இல்ல சரித்திரம்…

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஆக்சன் சினிமா கிங் என்றால் அது இயக்குனர் ஹரி தான் என்று கூறலாம். ஆனால், அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சிங்கம் 3, மற்றும் சாமி இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆதலால், மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஹரி.

தற்போது அவர் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் வரும் ஜூலை 1ஆம் தேதி யானை திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக அண்மையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் ஹரி கலந்துகொண்டார். அப்போது தனது மச்சானும் யானை படத்தின் நாயகனுமான அருண் விஜய் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக இருந்தது. அந்த திரைப்படத்தை நான் பார்த்துவிட்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தேன். மேலும் அஜித்திற்கு மனதார நன்றி தெரிவித்தேன்.

ஏனென்றால், ஒரு மிகப் பெரிய ஹீரோ அவருக்கு நிகரான ஒரு வில்லன் கதாபாத்திரதம் என படத்தில் இடம் கொடுப்பது மிகவும் அரிது. அதனை அஜித் செய்துள்ளார். அதற்கு காரணம் அஜித், தன் மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையே. அதன் காரணமாகத்தான் தைரியமாக இன்னொரு நடிகருக்கு அந்த வாய்ப்பை வழங்கி உள்ளார் அஜித். அந்த மனது அவருக்கு வந்துள்ளது. அதனால் நான் அஜித்திற்கு மனதார நன்றி கூறினேன் என்று அந்த நேர்காணலில் ஹரி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் உங்கள் படங்களில் இதுவரை அருண் விஜய் நடித்ததில்லை, என்று கேட்கப்பட்டபோது, ஹரி , ‘என் படத்தில் நடிக்க வேண்டும் என்றால், அவருக்கு ஒரு கமர்ஷியல் வேல்யூ இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் எனது கதைக்கு அது செட் ஆகும். அது தற்போது அருண் விஜய்க்கு கச்சிதமாக உள்ளது.’ அதன் காரணமாகத்தான் தற்போது அந்த இந்த யானை படம் உருவாகி உள்ளது என்று வெளிப்படையாக பேசினார் இயக்குனர் ஹரி.

No posts to display