மீண்டும் நேருக்கு நேர் அஜித் உடன் மோதும் விஜய் !!

0
மீண்டும் நேருக்கு நேர் அஜித்  உடன்  மோதும் விஜய் !!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் விஜய், அஜித் என்று அனைவர்க்கும் தெரியும். இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர்கள் படம் வெளியானாலே வசூல் ரீதியா மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடும். சினிமாவை தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரியும்.

ஆனால், இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டு கொண்டேதான் இருக்கிறார்கள். விஜய் படம் வெளியான அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும், அஜித் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் கலாய்த்தும் தான் வருகிறார்கள். இந்த சண்டை நிறுத்தி இருதரப்பு ரசிகர்களையும் ஒன்று சேரவேண்டும் என்ற இணைந்து ஒரு படம் நடித்தால் மட்டுமே நடக்கும்.

ஆனால், இப்போது ஒரு தகவல் இணையத்தில் உலாவி வருகிறது. அது என்னவென்றால், அஜித் நடித்து வரும் “AK61” திரைப்படமும், விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஆனால் இன்னும் அஜித்தின் 61-வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் படமும் அஜித்தின் படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு வீரம் திரைப்படமும் ஜில்லா திரைப்படமும் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரே தினத்தில் வெளியானது.

No posts to display