தனது தங்கை நடந்த திருமணத்தில் அண்ணன் கொடுத்து அற்புத பரிசால் தறி அழுத குடும்பம் !! வைரலாகும் வீடியோ

0
தனது  தங்கை நடந்த திருமணத்தில்  அண்ணன் கொடுத்து அற்புத பரிசால் தறி அழுத குடும்பம் !! வைரலாகும் வீடியோ

இந்தியாவில் தங்கையின் திருமணத்தின் போது இறந்த தந்தையை மெழுகு சிலையாக வடித்து அண்ணன் பரிசளிக்க கண்ணீர்விட்டு அழுத நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்- ஜெயா தம்பதி, இவர்களுக்கு ஹனிக்குமார் என்ற மகனும் சாய் என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுப்பிரமணியன் கடந்தாண்டு உயிரிழந்தார், அவரின் இழப்பை தாங்க முடியாமல் குடும்பமே சோகத்தில் மூழ்கி கிடந்தது.

இந்நிலையில் தங்கை சாய்க்கு, திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் ஹனிக்குமார், மதன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சொந்த பந்தங்கள் சூழ வெகு விமர்சையாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

ஆனால் தந்தை இல்லையே என்ற குறை மட்டும் இருந்துள்ளது. அந்நேரத்தில் தனது தங்கைக்காக அந்த பரிசை வழங்கியுள்ளார் ஹனிக்குமார்.

ஆம். தந்தையின் மெழுகு சிலையை பரிசாக கொடுத்துள்ளார், அதைப்பார்த்ததும் ஒட்டுமொத்த திருமண மண்டபமும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

சாய் தந்தையின் மெழுகு சிலையை முத்தமிட்டு அழுக, அவரை சமாதானப்படுத்தியுள்ளார் புதுமாப்பிள்ளை மதன்.

No posts to display