கமல் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் மாற்றமா? ரசிகர்கள் அதிர்ச்சி

0
கமல் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் மாற்றமா?  ரசிகர்கள் அதிர்ச்சி

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது என்பதும் அந்த வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக KGF உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பணியாற்றிய அன்பறிவ் இரட்டையர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

முன்னதாக இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தை இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

No posts to display