ஹனிமூன் முடிந்ததும் வேலையைக் காட்டிய நயன்தாரா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
ஹனிமூன்  முடிந்ததும் வேலையைக் காட்டிய நயன்தாரா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பிய நயன்தாரா தற்போது மும்பை கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்ற நிலையில், அங்கிருந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

தேனிலவு முடிந்து சமீபத்தில் இந்தியா வந்த இவர்கள் அடுத்த என்ன செய்ய உள்ளனர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நாடு திரும்பிய கையோடு மும்பைக்கு சென்றுவிட்டதாகவும், அட்லி இயக்கி வரும் ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் என்பதால் நயன்தாரா குட்டி பிரேக் எடுத்த நிலையில், ஷாருக்கான் தொடர்பான காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டிருக்கிறது.

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ராசியான நடிகையான தீபிகா படுகோன் கவுரவத் தோற்றத்தில் வருகிறாராம். ஜவான் மூலம் அட்லி மட்டும் அல்ல நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display