சன் டிவியின் புகழ் மணிமேகலை சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? ஆத்தி நம்பவே முடியல

0
சன் டிவியின் புகழ் மணிமேகலை சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? ஆத்தி நம்பவே முடியல

சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியில் செட்டிலாகிவிட்ட மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இத்தனை கோடியா என ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.

‘குக் வித் கோமாளி’ உள்பட ஒருசில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மணிமேகலை தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவர் அதிகமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

விஜய் டிவியில் இருந்து வரும் வருமானத்தை விட தனது யூடியூப் சேனல் மூலம் அவர் அதிக வருமானத்தை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுவாரஸ்யமான வீடியோக்களை அவர் அவ்வப்போது பதிவு செய்து வருவதால் அவரது யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யூடியூப் வருமானம் மற்றும் விஜய் டிவி வருமானம் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து மணிமேகலையின் சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 8 கோடி முதல் 35 கோடி ருபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் மணிமேகலையின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது உண்மைதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் விஜய் டிவியின் இன்னொரு பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதால், இவரது சொத்து மதிப்பு சுமார் 9 கோடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

No posts to display