மீண்டும் கார்த்தியுடன் இணையும் நாகார்ஜூனா! செம அப்டேட் இதோ !!

0
மீண்டும் கார்த்தியுடன் இணையும்  நாகார்ஜூனா! செம அப்டேட் இதோ !!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் கார்த்தி இணைந்து முதல் முதலில் ‘தோழா’ என்ற படத்தில் நடித்த நிலையில், தற்போது மீண்டும் நாகார்ஜூனா மற்றும் கார்த்தி இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப் படம் தீபாவளி அன்று ரிலீஸாக போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ‘சர்தார்’ படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை நாகார்ஜுனாவின் ‘அன்னபூர்ணா ஸ்டூடியோ’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து தனது நன்றியை சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கும் வகையில், “நான் நாகார்ஜூனா காரு உடன் இருக்கும்போது அவர் எப்போதும் என்னை பற்றி நன்றாக உணர வைத்துள்ளார். இப்போது அவர் எனது படத்திற்கு ஆதரவாக இருக்கிறார் என்பதை அறிந்தது என்னை பலப்படுத்தியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு நாகார்ஜூனா பதில் தெருவிக்கயில், “அன்புள்ள கார்த்தி என் தம்பி!! நான் உங்களுடன் செலவழித்த தருணங்களை எப்போதும் நேசித்தேன் மேலும் மேலும் எதிர்பார்க்கிறேன்!! தம்முடு தாலாட்ட போகிறாய்!!கடவுள் அருள்வாயாக!!” என குறிப்பிட்டுள்ளார்.

No posts to display