பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் !! மணப்பெண் யார் தெரியுமா ? வைரலாகும் தகவல் !!

0
பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் !! மணப்பெண் யார் தெரியுமா ? வைரலாகும் தகவல் !!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஹரிஷ் கல்யாண் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதனை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘தாராள பிரபு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது அவர் நடிப்பில் ‘நூறு கோடி வானவில்’, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹரீஸ் கல்யாணின் பெற்றோர் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு பொருத்தமான பெண்ணை தேடும் பொறுப்பை ஹரிஷ் கல்யாண் தனது பெற்றோரிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஹரிஷ் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No posts to display