விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா ? வெளியான அப்டேட் இதோ !!

0
விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 படத்தின்  ஷூட்டிங் எப்போது தெரியுமா ? வெளியான அப்டேட் இதோ !!

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

திருமணம் முடிந்த நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளாராம். நவம்பர் மாதத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display