ஒத்த போட்டோவால் வந்த வினை !! வெங்கட்பிரபு செய்த வேலையால் கடுப்பான அஜித் !! நீங்களே பாருங்க

0
ஒத்த போட்டோவால் வந்த வினை !! வெங்கட்பிரபு செய்த வேலையால் கடுப்பான அஜித் !! நீங்களே பாருங்க

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அது மங்காத்தா திரைப்படம் தான். அந்த அளவுக்கு அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பிரபலமாக உள்ளது. யாரும் எதிர்பார்க்காத பிளாக்பஸ்டர் வெற்றியை அஜித் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணி கொடுத்தது.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த சமயம் அஜித் கூட மங்காத்தா இரண்டாம் பாகம் ரெடியாக இருந்தால் நடிக்கலாம் என்றுதான் இருந்தாராம். ஆனால், உடனடியாக கதை இல்லாத காரணத்தால் வெங்கட்பிரபு சிறிய பிரேக் விட்டார் என கூறப்படுகிறது.

ஆனால், உண்மையில் நடந்தது வேறு ஒரு சம்பவமாம். அதாவது அஜித் எப்போதும் தனிமை விரும்பி. தனது புகைப்படம் கூட தன்னை மீறி வெளியில் செல்லக்கூடாது என்று கவனமாக இருப்பவர்.

மங்காத்தா ரிலீஸ்க்கு பிறகான சமயம் அது. அஜித் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் சந்தித்துக்கொண்ட போது ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை அஜித்தின் அனுமதி இன்றி வெங்கட் பிரபு உடனடியாக சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டாராம்.

உடனே அஜித் ரசிகர்கள் மங்காத்தா இரண்டாம் பாகம் வெளியாக போகிறது என்று இணையத்தில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இந்த செய்தி அஜீத்தின் காதுகளுக்கு சென்று விட்டது. அதனால் அவர் அந்த சமயம் கடுப்பாகி விட்டாராம்.

இதன் காரணமாகத்தான் தற்போதுவரை மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் சூழல் உருவாகவில்லை என்றும், இனியும் வெங்கட்பிரபுவுக்கு அஜித் கால்ஷீட் ஒதுக்குவது மிகவும் கடினம் என்றும் சினிமா மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.

No posts to display