இப்போதைக்கு இந்த மாதிரி கதை வேண்டாம் .! ஹிட் இயக்குனரை திருப்பி அனுப்பிய விஜய்.?

0
இப்போதைக்கு இந்த மாதிரி கதை வேண்டாம் .! ஹிட் இயக்குனரை திருப்பி அனுப்பிய விஜய்.?

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக திகழும் விஜய் தற்பொழுது மக்களுக்கு பிடித்தவாறு ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கத்தில் படம் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கேள்வியாக நாளுக்கு நாள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கிடையில், விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயை சந்தித்து கதை சொன்னதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்”நான் விஜய் சாரை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சந்தித்து அவரிடம் இரண்டு அருமையான கதைகள் கூறினேன். கதையை விஜய் சார் முழுவதுமாக கேட்டார்.

அதன்பிறகு, விஜய் சார் இப்போது இதுபோன்ற கதை வேண்டாம். மக்கள் இந்த காலகட்டத்தில் ஆக்ஷன் படங்களை விரும்புகின்றனர். இந்த கதைகள் இருக்கட்டும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டார். இருந்தாலும் அவருக்குப் பிடித்தமான கதையைத் தயார் செய்து மீண்டும் அவரைச் சந்தித்துக் கதை கூறுவேன்.” என உறுதியாக கூறியுள்ளார்.

இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் நீங்கள் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி படங்கள் எங்களுக்கு பிடிக்கும் ஆனால், இப்போது அந்த மாதிரி கதைகளில் தளபதி நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

No posts to display