அதிரடியாக மீண்டும் இணையும் RRR பட கூட்டணி! ராஜமெளலி எடுத்த அதிரடி முடிவு

0
அதிரடியாக மீண்டும் இணையும் RRR பட கூட்டணி! ராஜமெளலி எடுத்த அதிரடி முடிவு

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாக்கிய இப்படத்தில் ஆலிட்யாபட் இணைந்து நடித்திருந்தார். இப்படம் 1000 கோடி ரூபாக்கு மேல் வசூலித்துள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்திலும் 45 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ பட கூட்டணியை வைத்து, மீண்டும் ஒரு படம் இயக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து தெலுங்கு படத் தயாரிப்பாளரிடம் கதை கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெருவிக்கின்றன.

தற்போது, ராஜமெளலி – மகேஷ்பாபு கூட்டணி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு, அடுத்ததாக ‘ஆர்ஆர்ஆர்’ படக் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No posts to display