ஒரு வழியாக வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் – மாஸ் அப்டேட் இதோ !

0
ஒரு வழியாக வெளியான ‘புஷ்பா 2’  படத்தின் – மாஸ் அப்டேட் இதோ !

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா: தி ரூல்’ என்று உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல உருவாக்க படுகிறதாம் என்று கூறப்படுகிறது. புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயற்சி செய்யும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூறுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

pushpa 2

இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

No posts to display