இந்த ஒரு காரணத்தினால் ரஜினிகாந்துடன் இணையும் வாய்ப்பை மிஸ் செய்த லோகேஷ் கனகராஜ்.! அவரே கூறிய உண்மை இதோ !!

0
இந்த ஒரு காரணத்தினால் ரஜினிகாந்துடன் இணையும் வாய்ப்பை மிஸ் செய்த லோகேஷ் கனகராஜ்.!  அவரே கூறிய உண்மை இதோ !!

லோகேஷ் கனகராஜ் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் வெற்றியை ருசித்த நிலையில் அண்மையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த மூன்று படங்களை விட விக்ரம் படம் லோகேஷ் கனகராஜிக்கு மிகப் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் கமலுடன் பகத் பாஸில், விஜய் சேதுபதி, சூர்யா போன்றோர் சிறப்பாக நடித்து அசத்தினார் படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது வரை விக்ரம் திரைப்படம் சுமார் 370 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி 400 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக தளபதி விஜய்யுடன் கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் தொடர்ந்து லோகேஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சில சுவாரஸ்ய பதில்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ரஜினியுடன் இணையை இருந்த படம் எதனால் கைவிடப் பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

vikram

லோகேஷ் சொன்னது : மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு சிறப்பான படத்தை இயக்குவதற்கான வேலைகளை ஆரம்பிக்க ரெடியாக இருந்தது ஆனால் அந்த சமயத்தில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை மேலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் சில காரணங்களால் அந்த படம் டேக் ஆஃப் செய்யப்படாமலேயே போனது. வெகு விரைவிலேயே ரஜினியுடன் இணைந்து ஒரு புதிய படத்தை எடுப்பேன் என கூறினார்.

No posts to display