வெண்டைக்காய் செய்யும் போது இந்த டிப்ஸை மட்டும் மறக்காதீர்கள்….இவ்வளவு ஈசி தெரியுமா ?

0
வெண்டைக்காய் செய்யும் போது இந்த டிப்ஸை மட்டும் மறக்காதீர்கள்….இவ்வளவு ஈசி தெரியுமா ?

வெண்டைக்காயை சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

வெண்டைக்காயை வாங்கும் போது சிறியதாகவும், முத்தலாக இல்லாமல் மிருதுவாகவும், நடுவில் இருந்து உடைய கூடியதாகவும் இருப்பதை தேர்வு செய்ய வேண்டும். பழுப்பு நிற புள்ளிகள் அல்லது கறைகள் உள்ள காயை எடுக்காமல் தவிர்க்கவும்.

நீங்கள் வெண்டைக்காயை வாங்கிய உடன் அவற்றை ஒரு பேப்பர் அல்லது ஜிப் பவுச்சில் வைத்து போர்த்தி ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

இதை 3-4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம். நறுக்கிய வெண்டைக்காய்களை ஸ்டோர் செய்ய விரும்பினால், அதற்கு ஜிப் பவுச்சை பயன்படுத்தி கொள்ளலாம்.

வெண்டைக்காயை சமைப்பதற்கு முன் கழுவி வெட்டினால் அது குழையும். ஏனெனில் தண்ணீர் அதன் குழையும் தன்மையை அதிகரிக்கிறது. எனவே வெண்டையை சமைக்கும் முன் கழுவ வேண்டாம்.

வெண்டைக்காயை கழுவும் போது அதை அறை வெப்பநிலையில் வைத்து நறுக்கத் தொடங்குங்கள். மெல்லிய துண்டுகளாக வெட்டுவதை விட பெரிய துண்டுகளாக வெண்டைக்காய்களை வெட்டுவது எப்போதும் சிறந்தது.

வெண்டையின் குழையும் தன்மையை குறைக்க அதை உறைய வைத்து, உறைந்திருக்கும் போதே அதை வெட்டலாம். அல்லது சமைப்பதற்கு முன் அரை மணி நேரம் வினிகரில் ஊறவைப்பது வெண்டைக்காயின் குழையும் தன்மையை குறைப்பதற்கான மற்றொரு வழி.

சமைப்பதற்கு முன், வெண்டையை கழுவி உலர வைக்கவும்.

No posts to display