அஜித்துக்கு கொக்கி போடும் உதயநிதி !! செவி சாய்ப்பரா அஜித் ! இணையத்தை அதிர வைத்த கூட்டணி.!

0
அஜித்துக்கு கொக்கி போடும் உதயநிதி !! செவி சாய்ப்பரா அஜித் ! இணையத்தை அதிர வைத்த கூட்டணி.!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சுவாரியார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

Ak62

இதனையடுத்து, அஜித்தின் 63-வது படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார்..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே மீண்டும் சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து படம் இயக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி கொண்டே தான் வருகிறது.

தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அஜித்தின் 63-வது படத்தை தீனா, கஜினி, சர்கார் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும், அந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் புதிதாக ஒரு தகவல் பரவி வருகிறது. கண்டிப்பாக இந்த கூட்டணி இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

No posts to display