வசூலில் புதிய உச்சத்தை தொட்ட விக்ரம் படத்தின் Box office Report இதோ !!

0
72
vikram movie

ஜூன் 3 ஆம் தேதி வெளியான தமிழ் ஆக்‌ஷன் படமான ‘விக்ரம்’ இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, மேலும் இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ 400 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மாபெறும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது, 5 வருடங்களாக எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையான பாகுபலி 2 பட தமிழக வசூல் சாதனையையே விக்ரம் படம் முறியடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

மற்றபடி வேறு எந்த நடிகரின் படமும் இந்த வருடம் இவ்வளவு வசூல் செய்யவில்லை.இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன சில நாட்களிவேயே ரூ. 200 கோடியை எட்டி சாதனை படைத்தது. இன்னும் ஒரு வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 200 கோடியை வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

vikram kamal

தற்போது உலகம் முழுவமும் படம் ரூ. 380 கோடி வரை வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் தவிர, இப்படத்தில் காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் சூர்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். வேலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்க உள்ளார், இதற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது