கோலிவுட் டு பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் விஜய்! பக்கா மாஸ் தகவல் இதோ !!

தமிழ் சினிமாவில் வெற்றி பட இயக்குநராக தற்போது வலம் வரும் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற மாஸ் படங்களை இயக்கியிருந்தார். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் நிலையிலும் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் முன்னணி இயக்குநராக உச்சம் தொட்டுள்ளார்.

இந்நிலையில் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜவான் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில், ஜவான் படத்தில் நடிகர் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களின் தகவல்கள் தெருவிக்கின்றன. மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜவான் படம் இந்தியில் எடுக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.