வெங்கட்பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன் படத்தின் கதை இதுவா ? வைரலாகும் தகவல்

0
வெங்கட்பிரபுவுடன் இணையும்  சிவகார்த்திகேயன் படத்தின் கதை இதுவா ? வைரலாகும் தகவல்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 11-வது திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் அந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இதனையடுத்து இருவரும் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வெங்கட்பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்ட நிலையில் பாரதிராஜாவும் இணைந்து கொண்டார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபுவின் 11வது படத்தின் பூஜையில் கலந்துகொண்டதால் அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No posts to display