படு மொக்கை படமான பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு படத்திற்காக விஜய் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது. ஏன், நெட்டிசன்கள் பல கிண்டலுக்குள்ளானது.

பலரும், இப்படம் படுமொக்கையாக இருக்கிறது என்று விமர்சன கூறியதை கூட நாம் பார்த்தோம். இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுத்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

Thalapathy 66

இப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் புது போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்த சில கிண்டங்களை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Thalapathy 66

இந்நிலையில், வாரிசு படத்தில் நடிக்க தளபதி விஜய்க்கு சுமார் ரூ. 118 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு முந்தைய படம் படுதோல்வியடைந்திருந்தாலும், கூட தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ளாமல் இன்னும் அதிகப்படுத்தியுள்ளார் விஜய் என்று பலரும் பேசத்துவங்கிவிட்டார்கள்.

Thalapathy 66