தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைக்காவிட்டாலும் பின்னர் தன் நடிப்பு திறமையால் உச்சம் தொட்ட நடிகர் தான் தனுஷ்.இவர நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் மாறன். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வாத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைபடம் தான் ‘திருச்சிற்றம்பலம்’.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
இப் படத்தில் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அதே போல கதாநாயகிகளாக ப்ரியா பவானி ஷங்கர் நித்யா மேனன் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
அந்த வகையில் பிரியா பவானி சங்கர் ரஞ்சனி என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அடுத்ததாக பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது
மேலும் இதனை அடுத்து பிரகாஷ்ராஜ் நீலகண்டன் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அதன்பின் நித்யாமேனன் சோபனா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தனுஷ் அனிருத் காம்போவில் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.